சாவகச்சேரி பகுதியில் போக்குவரத்துப் பொலிசார் திடீர் சோதனை!! பலருக்கு வழக்குப் பதிவு!!

யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பகுதியில் போக்குவரத்து பொலிசார் இணைந்து  நடாத்திய தீடிர் சோதனை நடவடிக்கை இன்றைய தினம் நுணாவில் பகுதியில் நடைபெற்றது.

இச்  தீடிர் சோதனையின் போது அதிவேகமாக வாகனங்களை செலுத்திய நான்கு சாரதிகள் மற்றும் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய சாரதி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய சாரதியை கைது செய்த பொலிசார் நாளைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.