யாழ்ப்பாண மேசன்மாருக்கு கொழுப்பு கூடிவிட்டதா?

வட பகுதிகளில் கட்டப்படும் கட்டட வேலைகளுக்கு பெரும்பாலும் சிங்களவர்களையே ஒப்பந்த அடிப்படையில் வைத்து வேலை செய்விக்கிறார்கள். எமது பிரதேசத்தில் பல வேலையாட்கள் இருந்தும் சிங்களவர்களையே கூட்டிவந்து வேலை செய்விக்கிறார்கள் என்று பலரும் குறைகூறுவது உண்டு. அவ்வாறு கட்டடம் கட்டுவிக்கும் நண்பர் ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது கேட்டேன் ஏன் எங்கட ஆட்கள் வேலை செய்யமாட்டார்களா அல்லது செய்யத் தெரியாதா? ஏன் எங்கட காசுகளை வேற யாருக்கேன் கொடுக்குறீர்கள் என்றேன்???

அவர் கூறிய சில காரணங்கள்… எங்கட ஆட்களை தேடி பிடிக்கிறதே கஸ்ரம் அதோட சம்பளங்களும் கூட வேலை துப்பரவும் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு ஆள் வருது அடுத்த நாள் இன்னொரு ஆள் வருது. இப்படி வேலையை இழுத்து இழுத்து கொண்டு போறாங்கள். அதைவிட காலையில 9 மணிக்கு வாறாங்கள் வந்து உடுப்புகளை மாத்திப்போட்டு அங்க நின்டு இங்க நின்டு வேலையை தொடங்கீட்டு ஒரு 10 மணிக்கு பிலேன்ரீயோட வடை குடுக்கவேணும் அதை வைச்சுக்கொண்டு ஊர் ஞாயம் கதைச்சு அரை மணித்தியாலம் கடத்துவாங்கள், பிறகு கொஞ்ச நேரம் வேலை செய்வார்கள் பிறகு சரியா 12 மணிக்கு எல்லாத்தையும் வைச்சுப்போட்டு சாப்பிட றெடி பன்னுவார்கள், பிறகு சாப்பிட்டு முடிய ஒரு மரத்திற்கு கீழ இருந்து வெற்றிலை போட்டு கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளுவாங்கள், பிறகு 2 மணிக்கு திரும்ப வேலையைத் தொடங்கி 3 மணிக்கு தேத்தண்ணீர் தாங்க என்பார்கள், பிறகு ஒரு கொஞ்ச நேர வேலை, சரியா 4 மணி என்டவுடனம் எல்லாத்தையும் தட்டிக்கிட்டி, கழுவி வைச்சிட்டு 4.30 மணிக்கு சம்பளத்தை வாங்கிக்கொண்டு வெளிக்கிட்டிடுவாங்கள். அங்க முடிஞ்ச வேலையைப் பாத்தா காலமை எப்படி இருந்ததோ அதே மாதிரியே இருக்கிற மாதிரி இருக்குது. இப்படி என்டா எப்ப வேலையை முடிக்கிற எப்ப நான் முன்னேறுவது…. சிங்களவர்கள் என்டா இங்கையே நிக்கிறாங்கள் காலமை வெய்யில் வாறத்திற்கு முன்னர் தொடங்கீடுவாங்கள் நேரத்தைப் பாத்தா 5 மணியா இருக்கும். அவசர அவசரமா வேலையை செய்து போட்டு பிறகு வெய்யில் வர கொஞ்ச நேரம் இருந்திட்டு பிறகு திரும்ப வேலை செய்வார்கள். நேர காலம் பார்க்காமல் தொடர்ந்து வேலை செய்வார்கள். வேலையை பாக்கவும் ஆசையா இருக்கும். மாலை 6 மணிவரை வேலை செய்துவிட்டு தம்பி இங்காளை எங்கையும் நல்ல கள்ளு எடுக்கலாமே என்பார்கள். வாங்கிக் கொடுத்தால் குடித்துவிட்டு படுத்துவிடுவார்கள். பிறகு திரும்ப அடுத்த நாள் காலையில தொடங்கீடுவாங்கள். இது எங்கடயளுக்கு காசுதான் முக்கியம் அடுத்தவன் எப்படி உழைக்கிறான், அவனுக்கு எப்படி காசு வருது என்று நினைக்கிதுகளா??? என்று தனது ஆதங்கத்தை சொல்லி முடித்தார்.

அப்படி வேலை செய்கின்ற எமது வேலையாட்களுடன் உரையாடும்போது கூறுவார்கள். இப்ப அடிக்கிற வெய்யிலில நிக்க முடியுதில்லை. மண்டை வெடிக்கிறமாதிரி இருக்கு, அதோட கொஞ்ச நேரம் வேலை செய்யவே களைக்குது, இப்பத்தையான் சாப்பாடுகளும் அப்படி தானே, எல்லாம் மருந்துகலந்த மரக்கறிகளும், எண்ணெய் வகைகளும், கடைகளில ஒழுங்கான சாப்பாடும் இல்லை, உடம்பு வேலை செய்ய விடுகுது இல்லை என்று கூறுவார்கள்….

என்னத்தைச் சொல்ல…

நன்றி

முகப்புத்தகம்