கணவனின் ஆண்குறியை அறுத்து கழிவறையில் வீசிய மனைவி

தென்கொரியாவில் பெண்ணொருவர் தன் கணவர் கோல்ப் விளையாட்டில் அதிக நேரத்தினையும், கவனத்தையும் செலுத்தி வந்தமையினால் அவரின் ஆண்குறியை அறுத்து கழிவறையில் வீசிய சம்பவம் உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் கோல்ப் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். நேரம், காலம் கடப்பது தெரியாமல் அதிக நேரம் தினமும் கோல்ப் மைதானத்தில் கழித்துள்ளார். இதனால், தனது 50 வயது கணவன் மீது கோபமடைந்த 54 வயதுடைய பெண் அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்த வேளையில் அவரின் ஆண்குறியை வெட்டி கழிவறையில் வீசியுள்ளார்.

மேலும், வலியால் துடித்த குறித்த கணவரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் தான் செய்த குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ள மனைவி, தன்னை கணவர் ஒதுக்கியதன் காரணத்தால் இப்படி செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.