02. 09. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ரிஷபம்

மதியம் 3.01 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

மிதுனம்

குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 3.01 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

கடகம்

கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

சிம்மம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

துலாம்

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

விருச்சிகம்

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

தனுசு

மதியம் 3.01 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

மகரம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 3.01 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

மீனம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய சொத்துச் சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்