தனக்குத்தானே குழந்தை பெற்ற பெண்: பனிக்குடத்துடன் குழந்தை வெளியே வந்ததால் பரபரப்பு

அமெரிக்காவில் உள்ள பிட்டிஸ்பர்க் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர்ன பிரசவ வலி வந்தது.

நிறுத்தி உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று பார்த்தால் அக்கம்பக்கம் யாரும் இல்லை. இந்த நிலையில் திடீரென குழந்தை வெளியே வர தொடங்கியது

அந்த நேரத்தில் மனதை தைரியப்படுத்தி கொண்டு தனக்குத்தானே குழந்தை பெற்றுக்கொண்டார் அந்த பெண். ஆனால் அந்த குழந்தை பனிக்குடம் உடையாமல் அப்படியே வந்தது. இந்த நிலையில் அவர் விரைந்து மருத்துவமனை சென்றதால் குழந்தையும் தாயும் காப்பாற்றப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.