ஓட்டுசுட்டானில் கத்திகுத்து சம்பவம் - மூவர் படுகாயம்

முல்லைத்தீவு ஓட்டுசுட்டான் பகுதியில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கத்திகுத்து சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணத்தை கண்டித்து ஒட்டுசுட்டான் வர்த்தகசங்கம் கதவடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் படுகாயமடைந்த மூவர் வியாபாரிகள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படுகாயமடைந்த வியாபாரிகள் முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவலகள் கிடைத்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஓட்டுசுட்டன் வர்த்தகநிலையத்தில் இனந்தெரியாத நபர் ஒருவருக்கும் வியாபாரி ஒருவருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏட்பட்டுள்ளதாகவும் அதன் காரணத்தால்தான் குறித்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.