யுத்த கால நிலைமை போல் காட்சியளிக்கும் யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் இன்று காலை முதல் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்தே இந்தச் சோதனை நடவடிக்கைகளிலும் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் வாள் வெட்டுத் தாக்குதல் உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்து அதனோடு தொடர்புடைய சந்தேக நபர்களைத் தேடி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வலை வீசியுள்ள நிலையிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பொலிஸாரினதும் விசேட அதிரடிப்படையினரதும் இந்த நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலும் யுத்த கால நிலைமயை ஒத்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மத்தியில் ஒருவித பதற்றம் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.