வேல்ட் விசனின் குடிநீர் சலமாக மாறிய அதிசயம்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் சங்கானையில் விசித்திரமான நூதன திருட்டு ஒன்று அரங்கேறவிருந்த நிலையில் அரச அதிபரின் தலையீட்டினால் இறுதி நேரத்தில் முறியடிக்கப்பட்டுள்ளது.

உலக தொண்டு நிறுவனமான வேல்ட் விசன் இலங்கையில் பல அபிவிருத்தி திட்டங்களை தமிழ் மக்களுக்காக செய்துள்ளது.

சுனாமிக்கு பின்னர் பல வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில் தற்போது பொறுப்பெடுத்துள்ள அதிகாரிகளால் தற்போது பல மோசடிகள் செய்யப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டம் சங்கானை வைத்தியசாலையில் நிறைவேற இருந்த நிலையில் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் பிரதேச செயலாளர் சோதிநாதனுக்கும் தொடர்புள்ளதாக மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மலசலக்கூடத்திற்கு குளிரூட்டி பூட்டுமளவிற்கு தற்போதுள்ள அதிகாரிக்கு பித்து பேதலித்து விட்டதாக வட்டுக்கோட்டைஇசங்கானை பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மலசலகூடத்திற்குள் உடைஞ்சு போயிருந்த கொமட்டை மாத்தி வர்னம் பூசுவதற்கு 18 இலட்சங்களை கணக்கு காட்டியுள்ளனர்.

மக்களை முட்டாளாக்கும் வேல்ட் விசன் அதிகாரியின் ஆதாரபூர்வ படங்களை வெளியிட முன்னர் அதிகாரிகள் திருந்தி நடப்பது மக்களுக்கும் நல்லது அதிகாரிகளுக்கும் நல்லது.