ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான சதி வலை கும்பலில் துவாரகேஸ்வரன்!

2. ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான சதி வலை கும்பலில் துவாரகேஸ்வரன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், யாழ்ப்பாண மக்களுக்கும் இடையில் ஏற்பட்டு இருக்கின்ற அன்புப் பிணைப்பை இல்லாமல் செய்கின்ற பகீரத முயற்சிகள், தீவிர முன்னெடுப்புக்கள் ஆகியவற்றில் முன்னாள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேஸ்வரன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் வலுவாக சந்தேகிக்கப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களை அரவணைத்து நடக்கின்ற ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன விளங்குகின்றார். இதனால் தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்ற ஜனாதிபதியாகவும் வரலாற்றில் இடம்பிடித்து உள்ளார்.

நான் புலிகளின் ஒற்றனாக இருந்தேன். நான் புலிகளின் உளவாளி என்று துவாரகேஸ்வரன் தனது வாயால் சொல்லும் ஆதாரம் இணைப்பு.

யாழ்ப்பாண மக்களுடன் அரசாங்கத்துக்கு இருக்கக் கூடிய இடைவெளியே இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சிக்கு இடைஞ்சல் என்று கண்டு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிக்கடி யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார். இம்மக்களோடு நெருங்கிப் பழகுகின்றார். இம்மக்களின் குறைகளை நேரில் செவிமடுக்கின்றார். இக்குறைகளை தீர்க்க உடன் நடவடிக்கை எடுக்கின்றார். இதனால் இவரை அமைதியின் காவலனாகவும், சமாதான தூதுவனாகவும், நல்லாட்சியின் நாயகனாகவும் யாழ்ப்பாண மக்கள் மனங்களில் வரித்து வைத்திருக்கின்றனர்.

இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் பிரிவினைவாத செயற்பாட்டாளர்களால் எதிரியாக பார்க்கப்படுகின்ற நிலையும் ஏற்பட்டு இருக்கின்றது. குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாட்டாளர்களில் ஒரு சாரார் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டு உள்ள மக்கள் செல்வாக்கை உணர்ந்து ஒரு வகை அச்சத்தில் மூழ்கி உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை யாழ்ப்பாண மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக இல்லாமல் செய்கின்ற வேலைத் திட்டத்தை முடுக்கி உள்ளனர். இதன் முதல் கட்டமாக இவரை யாழ்ப்பாணத்துக்கு வராமல் செய்கின்ற சதி வலையை திட்டமிட்டு பின்னி உள்ளார்கள்.

இவர்களால்தான் துவாரகேஸ்வரன் பயன்படுத்தப்படுகின்றார் என்று தெரிகின்றது. ஏனென்றால் ஜனாதிபதியை படுகொலை செய்ய யாழ்ப்பாணத்தில் சதித் திட்டம் கடந்த மாத இறுதியில் இடம்பெற்றதாக கதை கட்டி விட்டு உள்ளார். கடந்த வாரம் ஊடக மாநாடு நடத்தி பெரிய உண்மையை கண்டு பிடித்தவர் போல புரளியை கிளப்பினார்.

ஒருவேளை ஜனாதிபதியை கொல்வதற்கு உண்மையில் இடம்பெற்று இருக்கக் கூடிய சதிகளை குறித்து இவர் அறிந்து இருந்தால் பொலிஸாருக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவர் முன்கூட்டியே தெரியப்படுத்தி இருக்க வேண்டும். மாறாக இப்போது இரு வாரம் கழித்து ஊடகவியலாளர் மாநாடு நடத்தி ஜனாதிபதியில் அக்கறை மிகுதியாக உள்ளவர் போல் நடிக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் பொங்கல் விழா இடம்பெற உள்ளது. ஆனால் இவ்விழாவை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று புலி ஆதரவு ஊடகங்கள் அடிக்கடி வெவ்வேறு வடிவங்களில் செய்தி பிரசுரித்து வருகின்றன. இப்பகிஷ்கரிப்பு பிரசாரத்தோடு சம்பந்தப்படுத்தியே துவாரகேஸ்வரனின் ஊடகவியலாளர் மாநாட்டை பார்க்க வேண்டி உள்ளது.

ஏனென்றால் இவரின் ஊடகவியலாளர் மாநாடுகளை விடுதலைப் புலிகள் இயக்க செயற்பாட்டாளர்களே ஒழுங்கு பண்ணுகின்றனர் என்பதும், இவர் தெரிவிக்கின்ற கருத்துக்களை மேற்சொன்ன புலி ஆதரவு இணையத் தளங்களே அடுத்த நிமிடத்தில் பெரிதுபடுத்தி செய்தி பிரசுரிக்கின்றன என்பதும் ஊடகவியலாளர்களின் பொதுவான அபிப்பிராயமாக உள்ளது. யாழ். மாநகர சபை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவரும், புலிகள் இயக்க தலைவர் வே. பிரபாகரனிடம் பரிசு பெற்றவருமான ஒருவரே ஊடகவியலாளர் என்கிற போர்வையில் துவாரகேஸ்வரனின் ஊடகவியலாளர் மாநாடுகளுக்கு பின்னால் உள்ளார். துவாரகேஸ்வரன் மாநாட்டில் ஒப்புவிக்க வேண்டிய விடயங்களையும் இவரே சொல்லிக் கொடுக்கின்றார். அத்துடன் துவாரகேஸ்வரனின் ஊடகவியலாளர் மாநாட்டை முக்கியப்படுத்தி பிரசுரிக்க சொல்லி ஊடக நிறுவனங்களை தூண்டுகின்றார்.

துவாரகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்து இருந்த கருத்துக்கள் தொடர்பாக பொலிஸார் புலனாய்வுகளை முடுக்கி உள்ளனர். இவர் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படை ஆதாரம் அற்றவை என்று காணப்படுகின்ற பட்சத்தில் இவரின் குற்றத்துக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இவருக்கு பின்னால் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சலசலப்புகளை கருத்தில் கொள்ளவே இல்லை என்றும் நிச்சயம் யாழ்ப்பாணம் வருவார் என்றும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

துவாரகேஸ்வனுடன் கூட்டு வைத்துக் கொண்டு சதி வேலைகளை முடுக்கி விட்டு உள்ள கும்பலை குறித்த செய்திகள் அடுத்தடுத்த பதிவுகளில் விரைவில் வெளிவரும்.