அச்செழுவில் பொருள் விற்பனை நிலையத்தில் கொள்ளையர்கள் கைவரிசை

அச்சுவேலி பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட அச்செழு அம்மன் பகுதியில் உள்ள பொருள் விற்பனை நிலையத்தை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 34 ஆயிரத்து 950 ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று, நேற்று  (29) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்று (30) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூரையை பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையர்கள், பால்மா பெட்டிகள், பிஸ்கட் வகைகள், அத்தியாவசியப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள குற்றத்தடுப்புப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.