என்னையும் தேவையில்லைன்னு விரட்டுனாங்க! – ரகுமானை தொடர்ந்து ரசூல் பூக்குட்டி புகார்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இந்தி சினிமா புறக்கணிப்பதாக செய்திகள் வெளியாகி சர்ச்சைக்குள்ளான நிலையில் அதே கருத்தை முன் வைத்துள்ளார் ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி.

இந்தியாவிலேயே முதன்முறையாக சிறந்த இசை, பாடல் போன்றவற்றிற்கு ஆஸ்கர் விருதை வென்று ஒட்டுமொத்த உலகையும் இந்தியாவை திரும்பி பார்க்க செய்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அப்படியானவருக்கே பாலிவுட் திரையுலகம் வாய்ப்புகள் மறுப்பதாக அவரே சொல்லியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் சொன்னத்து உண்மைதான் என தனது அனுபவங்களை வெளியிட்டுள்ளார் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி. ஆடியோ மிக்ஸிங்கில் அசகாய திறமையாளரான ரசூல் பூக்குட்டி கேரளாவை சேர்ந்தவர். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த ஆடியோ மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை வென்றவர். தமிழில் எந்திரன், நண்பன், 2.0, ரெமோ உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

ஷேகர் கபூர் ஏ ஆர் ரகுமானுக்கு எழுதிய ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பூக்குட்டி “நான் ஆஸ்கர் விருது வென்ற பிறகும் கூட எந்த இந்தி திரைப்படத்திலும் பணியாற்ற அவர்கள் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. சில தயாரிப்பு நிறுவனங்கள் என் முகத்திற்கு நேராகவே ”நீங்கள் எங்களுக்கு தேவையில்லை” என்றார்கள்” என வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *