யாழில் டக்ளஸ் முதலிடம்

எட்டாவது நாடாளுமன்றத்தின் யாழ்ப்பாணத்துக்கான முதல்தர நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் வன்னி மாவட்டத்தின் முதல் தர நாடாளுமன்ற உறுப்பினராக சார்ள்ஸ் நிர்மலநாதனும், பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த தரப்படுத்தலை நாடாளுமன்ற அமர்வுகளின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாக கண்காணிக்கும் இணைத்தளமான manthri.lk இணையத்தளமே வெளியிட்டுள்ளது.

கடந்த நான்கரை வருடங்களில் தமிழர்களின் நிரந்தர தீர்வு விடயமாகவும் வன்னி மாவட்டத்தில் தமிழர்களின் தனித்துவத்தை அழிப்பதற்கான சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் அதிக நேரம் ஜனாதிபதி, பிரதமர் , அமைசர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டமைக்காகவும் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகமான நேரம் நாடாளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்தி தமிழர்களின் கலை கலாச்சாரத்தை பாதுகாத்ததுடன் மாவட்டங்கள் , கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் அதிகமாக நாடாளுமன்றத்தை பயன்படுத்தியமைக்காகவும் சார்ள்ஸ் நிர்மலநாதனை கெளரவித்து வன்னி மாவட்டத்தின் முதற் தர நாடாளுமன்ற உறுப்பினர் விருது வழங்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *