வைரலாகும் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் பிரச்சாரயுக்தி!

வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 5 இல் களமிறங்கியுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் மேற்கொள்வதில் பல வேட்பாளர்கள் திண்டாடிவருகின்றனர்.

அத்துடன் கோரோனா பரவலை தடுப்பதற்காக பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந் நிலையில், தனது பிரதேசத்தில் லிங்கநாதன் வித்தியாசமான உத்தியை கையாள்கிறார்.

அதாவது நெடுங்கேணி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் விற்கப்படும் குளர்பான வகைகள் உள்ளிட்ட பல உணவுப்பொதிகளில் தனது ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு குளிர்பான போத்தல்கள், மற்றும் பானங்களில் லிங்கநாதனின் படம் பொறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *