நாளை முதல் கடுமையாக அமுலாகும் நடைமுறை! நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

“பொது இடங்களில் தனிநபர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். மீறுவோர் 14 நாள்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள்” என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

கோவிட் -19 நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த 3 மாதங்களில் காணப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் தொடரப்பட வேண்டும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1ஆம் இணைப்பு

நாட்டில் முகக்கவசங்கள் அணியாதவர்களை 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறையானது நாளை முதல் கடுமையாக அமுலாகும் என மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் எச்சரித்துள்ளார்.

அத்துடன், முகக்கவசங்கள் அணியாதவர்கள் தொடர்பில் ஆராய நாளை முதல் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அரசினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாது பெரும்பாலானவர்கள் செயற்படுகின்றனர்.

மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் 6725 பேர் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் பயணித்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டது.

இதனால் நாளை முதல் முகக்கவசங்களை அணியாதவர்கள் 14 நாட்களுக்கு சுய தனிமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *