யாழில் பொதுத்தேர்தலுக்கான மக்கள் வாக்களிக்கும் மாதிரி தேர்தல் வாக்கெடுப்பு

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான மக்கள் வாக்களிக்கும் முன்னாயத்த நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – நாவந்துறையில் உள்ள சென். அன்ரனீஸ் வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு தெரிவத்தாட்சி அலுவலர் க.மகேசன் மற்றும் யாழ்.மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆர்.சி. அமல்ராஜ், தலைமையில் நடைபெற்றுள்ளது.

பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன், சுகாதார வழிமுறைகளுடன் கூடிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து, எவ்வாறு வாக்களிக்கப்பது தொடர்பான விழிப்புணர்வு முன்னாயத்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது சமூக இடைவெளி பேணப்பட்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த தேர்தல் ஒத்திகையின் போது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்னாயக, யாழ்.மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் க.மகேசன் ,யாழ்.மாவட்ட உதவி தேர்தல்ஆணையாளர் இ.அமல்ராஜ் , யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன்,காவல்துறையினர், சுகாதார துறை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *