குடித்து விட்டுப் பேஸ்புக்கில் கூத்தடிக்கும் தமிழரசுக் கட்சி இளைஞர் அணி உறுப்பினர்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்கள், வேட்பாளர்கள் தொடர்பில் முகநூலில் விமர்சிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள். இந்த அதிரடி தீர்மானத்தை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் யாழ் மாவட்ட கிளை நேற்று முன்தினம் (10) கூடி முடிவெடுத்தது.

வாலிபர் முன்னணியின் யாழ். மாவட்டக் கிளை நேற்று முன்தினம் கூடியது. இதன்போது, தமிழ் அரசு கட்சியின் பேஸ்புக் போராளிகள் பற்றியே அதிகம் பேசப்பட்டது.

அணியாக பிரிந்து நின்று மறு தரப்பு பிரமுகரை பேஸ்புக்கில் அவதூறு செய்வதை பலரும் சுட்டிக்காட்டினர். தமிழ் அரசு கட்சி பிரமுகர்களை பற்றியோ, கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களை பற்றியோ கட்சியின் இளைஞரணியினர் யாராவது முகநூலில் பகிரங்கமாக அவதூறாக எழுதினால், அது குறித்து கட்சி தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக வாலிபர் முன்னணியில் இருந்தும், கட்சியிலிருந்தும் நீக்குவது என முடிவானது.

கட்சியாக அல்லாமல், எம்.ஏ.சுமந்திரனின் அணியாக- சமூக செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில்- முகநூலில் அவதூறு பரப்பி வருபவர்களை பற்றியும் ஆராயப்பட்டது.

இந்த வகையானவர்களை- அவர்கள் ஆதரிக்கும் பிரமுகர்கள் ஊடாக கட்டுப்படுத்துவது என தீர்மனிக்கப்பட்டுள்ளது. இந்தவகையானவர்கள் சிலர் இரவில் மது அருந்தி விட்டு, நிதானமிழந்த நிலையில் தமிழ் அரசு கட்சியின் சில பிரமுகர்களை அவதூறு செய்து வருவதையும் சுட்டிக்காட்டினர்.

இந்தவகையானவர்கள் கட்டுக்குள் வராவிட்டால், அவர்கள் தமிழ் அரசு கட்சி சார்ந்தவர்கள் அல்ல, அவர்களிற்கும் கட்சிக்கும் தொடர்பில்லையென, பெயர் குறிப்பிட்டு அறிவிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை ஆதரிப்பதில்லையென்றும் அனைத்து வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கையிலும் ஈடுபடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

Yarloli


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *