Zoom தொழில்நுட்பத்தின் ஊடக தகவல்கள் திருடப்படலாம்! இலங்கை கணினி விவகார அவசர பிரிவு எச்சரிக்கை

Zoom தொழில்நுட்பத்தின் 4.6.10 முறைமையின் (Zoom Application version 4.6.10) ஊடாக அதனைப் பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி விவகார அவசர ஆயத்தக்குழு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“தொடர்பாடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்குப் பயன்படும் Zoom தொழில்நுட்பத்தின் 4.6.10 முறைமையின் (Zoom Application version 4.6.10) ஊடாக அதனைப் பயன்படுத்திவோரின் தரவுகள் திருடப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

இந்த Zoom முறைமையில் இடம்பெறும் கலந்துரையாடல்கள் ஊடாகத் தகவல்களைத் திருடுவதற்காக இரு வாய்ப்புக்கள் காணப்படுகின்றமை சைபர் பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

அதன்படி இந்த Zoom முறைமையின் பயனர்கள் தமது கலந்துரையாடல்களின் போது ஜிப் வீடியோக்களைப் (GIF) பரிமாற அனுமதிகப்பபடுக்கின்றது. இதனுடாகத் தகவல்கள் திருடப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அதேபோன்று Zoom முறைமையை பயன்படுத்துவதற்காக இரகசிய இலக்கத்தை (Process code) கலந்துரையாடல்களில் பரிமாறுவதன் மூலமும் இந்த முறைமையில் தகவல்கள் களவாடப்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

இதனூடாக மிகவும் இரகசியமான தகவல்கள் கூட தொடர்பற்ற மூன்றாம் தரப்பினருக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *