ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்? காலவரையின்றி ஒத்திவைப்பா?

இந்தியாவில் மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் காலவரையின்றி ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

இதன்காரணமாக கிரிக்கெட் உட்பட விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் ஏப்ரல் 15ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் நிலையில் மேலும் இரண்டு வார காலம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் காலவரையின்றி ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி கூறுகையில், பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாகக் கூறிய அவர், இதனால் ஐபிஎல் தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை.

ஆனால் அது நிச்சயமாக ரத்து செய்யப்படாது என்றும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *