ஆசனம் கிடைக்காவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனம் கிடைக்க பெற்றால் அடுத்த ஐந்து வருடத்தின் பின்னர் ஓய்வு பெறுவேன்.வயதுபோன பின்னர் அரசியல் செய்யப்போவதில்லை என கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அம்பாறை – கல்முனையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்ககும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஐக்கியம் பற்றி பேச்சு மாத்திரம் இறுதிவரை இருக்கின்றது. செயல்வடிவம் கொடுப்பது பற்றி பேசவேண்டும். நாங்கள் தயாராக இருக்கின்றோம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது போல இருக்க வேண்டும்.

மக்களுக்கு தேசிய நல்லிணக்கம் அவசியமில்லாமல் எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

நாங்கள் கட்சி சார்ந்து இருந்தாலும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு எம்மால் முடியும்.அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது போன்று எங்களுக்கு 5 ஆசனம் இருந்தால் போதும்.அதனால் தான் மக்கள் ஆணையை பெறுவதற்காக வடகிழக்கில் தனித்து போட்டிடுகிறோம்.

அத்துடன் பழிவாங்கும் எண்ணம் இருக்குமானால் நாம் எதையும் சாதிக்கபோவதில்லை . நாங்கள் அன்று என்ன சொன்னோமோ அதுதான் இன்று நடந்திருக்கிறது.

மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐக்கியத்தை பேச்சளவில் மாத்திரமே கொண்டுள்ளனர். நான் அரசுடன் பேசுவதற்கு பக்க பலமாக பிரதிநிதிகள் வேண்டும் அப்போதுதான் அரசுடன் பேரம் பேச வேண்டும்.அதற்கான ஆணையை நீங்கள் தருவீர்களானால் நான் உங்களுடன் நின்று செயற்படுவேன்.

சம்பந்தர் எதிர்கட்சி தலைவராக மாத்திரம் இருக்கவில்லை. நல்லாட்சியை கொண்டு வந்து அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து இருக்கிறார். சேர் பொன் இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, இரா சம்பந்தன், பிரபாகரன் போன்றோர் மக்களுக்கு எதுவும் உருப்படியாக செய்யவில்லை. மாறாக இந்திய அரசையோ இலங்கை அரசையோ நாம் குற்றம் சுமத்த போவதில்லை.

வடமாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவிக்கு அருகதை அற்றவர் கடந்த அவரது ஆட்சிக்காலத்தில் அர்த்த பூர்வமாக எதையும் செய்யவில்லை அதனால் தான் முதலமைச்சர் பதவிக்கு கையாலாகாதவர்.

மக்கள் ஆணை எனக்கு தந்தால் நான் அம்பாறை மாவட்டத்தில் கிழமைக்கு 3 நாளாவது இங்கு வந்து சேவையாற்றவும் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கூட்டமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்ட பொது ஊழியர் சங்கமானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அமைச்சர் கே.எம் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *