வாகனம் விபத்து.. கடத்தல்காரன் தப்பி ஓட்டம்..ஓமந்தையில் சம்பவம்!

வவுனியா- ஓமந்தை கள்ளிக்கும் பகுதிலிருந்து கள்ள மரங்களுடன் நகா் பகுதியை நோக்கிசென்ற கப் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று ஓமந்தை A9 வீதி கள்ளிகுளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் சட்டவிரோத மரங்களுடன் வவுனியா நோக்கிச் சென்றவேளை, கள்ளிக்குளம் வளைவில் திரும்பமுற்பட்டபோது வீதியின் அருகில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியது.

விபத்தை அடுத்து, வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *