எனது வாக்கு கோத்தபாயாவுக்கே!! கூறுவது யார்???

தன்னிலை விளக்கம் கீழே தந்துள்ளேன் முழுமையாக படித்துவிட்டு பட்டத்தை சூட்டவும்.

என்னைப் பொறுத்தவரை சிங்கள தலைமைகள் அனைவருமே கொழுக்கட்டை, மோதகம்,சுசியம் போன்றவர்கள் வெளித் தோற்றத்தில் வேறு வேறு தான் ஆனால் உள்ளே ஒரு வகைதான்.

என்னால் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது.

காரணம்:- ஆரம்பத்தில் இலங்கை அரசியலை பொறுத்தவரை (UNP)
ஜக்கிய தேசியக் கட்சியே இலங்கையை ஆட்சி செய்து வந்திருக்கிறது. அன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழரசு கட்சி முண்டுகொடுத்து வந்ததன் மூலம் அரசியல் ரீதியாக ஏமாற்றப் பட்டோம். அதனாலே விரக்தியடைந்த பல பல்கலைக்கழ மாணவர்கள் பல போராட்ட இயக்கங்களை தொடங்கினார்கள். இப்படி 36போராட்ட இயக்கங்கள் இருந்திருக்கிறது இவை அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைக்காக சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கும் இராணுவ அடக்குமுறைக்கும் எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய இயக்கங்கள்.

83 தமிழீழ விடுதலைப் புலிகளினால் 13சிங்கள இராணுவம் கொல்லப்பட்டதனை அடுத்து அப்போது ஆட்சியில் இருந்த சிங்கள பௌத்த பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சி அரசின் தூண்டுதலில் யூலை கலவரத்தை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்தது ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியே. இந்தியாவின் இராணுவத்தை அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு கொண்டு வந்து விடுதலைப் புலிகளுடன் அடிபட வைத்தவர் ரணசிங்க பிரேமதாச.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதவிகளை செய்து ஏனைய போராட்ட இயக்கங்களுடன் போராட விட்டவரும் இதே ரணசிங்க பிரேமதாச தான்.

இவ்வளவு போராட்ட இயக்கங்களும் ஒன்று சேர்ந்து இன்று சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு எதிராகவும் சிங்கள இராணுவத்திற்கும் எதிராக ஒற்றுமையுடன் போராடியிருந்தால் இன்று நாம் தமிழீழம் கண்டிருப்போம்.

அது மட்டுமல்ல இதே ரணசிங்க பிரேமதாசா விடுதலைப் புலிகளின் முக்கிய இரண்டாம் கட்ட தளபதி மாத்தையாவையும்,மாத்தையா வுடன் ஆயிரம் போராளிகளையும் பிரித்து விடுதலைப் புலிகளின் கைகளினாலே மாத்தையா மற்றும் போராளிகளை கொலை செய்ய வைத்தார்.

இந்தியாவின் எதிர்பை விடுதலைப் புலிகளுக்கு சம்பாதித்து கொடுத்தவரும் இதே ரணசிங்க பிரேமதாச தான்.

பல கலவரங்களை தமிழிழர் மீது திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக அழித்தனர். இனக் கலவரங்கள் யாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் இடம்பெற்றது.

வெள்ளை வான் கலாச்சாரத்தை உருவாக்கியதும் இதே ரணசிங்க பிரேமதாசா காலத்தில் தான்.

பின்பு விடுதலைப் புலிகளை அழிப்போம் என்று மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழர்களை ஒடுக்கினர்.

ரணிலும் சந்திரிக்கா அம்மையாரும் சேர்ந்து தமிழர்கள் மீது பொருளாதார தடை என்ற போர்வையில் பட்டினி போட்டு சித்திரவதை செய்தனர்.

பின்னர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து விடுதலைப் புலிகளையும் கருணா அம்மானையும் சகோதர யுத்தம் புரியவைத்து வெற்றி கண்டார்.

பின்னர் தற்போதுள்ள அமைச்சர் விஜயகலாவின் கணவர் மகேஸ்வரனூடாக தமிழீழ அரசியல்த் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்செல்வனை கொண்றொளித்து அரசியல் ரீதியாக தமிழர்களை பலவீனமாக்கி வெற்றி கண்டார். நாம் பலவீனம் அடைந்ததால் தான் நாம் முள்ளிவாய்க்காலில் தோற்க்கடிக்கப்பட்டோம்.

நாம்மை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தாலும் தந்திரமே எம்மை அழித்தது.

சந்திரிக்கா அம்மையார் யுத்தத்தை தொடங்கி வைத்தார்.மகிந்த ராஜபக்ச அவர்கள் யுத்தத்தை முடித்து வைத்தார்.
இவர்கள் எல்லோரும் எங்கள் அழிவையே விரும்பினார்கள். நாம் கொத்துக் கொத்தாக அழிந்தது கொண்டிருந்த போது இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி மார்கள் தமது தொலைபேசியை அணைத்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்கள்.

இவையெல்லாம் மறந்து எம்மை சிங்கள இராணுவத்திற்கு முற்பதாண்டுகாலம் தலைமை தாங்கி எமது சகோதர சகோதரிகளை கொண்றொளித்த சரத் பொன்சேகாவை இவர்கள் கைகாட்டிய பொழுது எல்லாவற்றையும் மறந்து எமது சாணக்கியர் சொன்னால் அதில் எதுவும் இருக்கும் என்று நம்பி ஐனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுத்தோம் சிறு நம்பிக்கை தீர்வு பெற்றுத் தருவார்கள் என்று ஆனால் நாம் சரத் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் காப்பாற்ற பட்டது.

பின்னர் மைத்திரி பால சிறிசேனவை கைகாட்டி வாக்கு போடச் சொன்னார்கள் தமிழர்கள் ஆகிய நாம் அவரை ஐனாதிபதியாக்கினோம்.

சாணக்கியர்,தமிழ் மூத்த அரசியல் வாதி,பழுத்த அரசியல் வாதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு எதிர்க் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம்(நல்லாட்சி) என்று ஒன்றை உருவாக்கி எதிர்க் கட்சி ஆளும் கட்சி என்ற வேறுபாடுகள் இன்றி நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.

இவர்கள் நினைத்திருந்தால் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்கலாம்.

13+ஜ நிறைவேற்றியிருக்கலாம்

இவ்வாறான பல விடயங்களை செய்திருக்கலாம் ஆனால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய வங்கியை கொள்ளையடித்து ஏப்பம் விட்டனர்.சுகபோக வாழ்கை வாழ்ந்தனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாக்க எனது முதலாவது வாக்கும் பிரயோகிக்கப்பட்டது.

இன்று இவர்கள் சொல்ல முடியாது கோட்டாபய வந்தால் வெள்ளை வான் வரும் கருப்பு வான் வருமென்று இவர்களுக்கு நாம் அதற்கான காலத்தை கொடுத்திருந்தோம். இது யாரின் தவறு?

வெள்ளை வான் வந்தால் வரட்டும் எனது முதுகில் ஊத்தை இல்லை நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை முதுகில் ஊத்தை உள்ளவன் சொல்வான் வெள்ளை வான் வரும் கருப்பு வான் வரும் என்று.

இந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரித்தாலும் தந்திரம் கொண்டவர்கள்.
ரணில் நினைத்தபடி தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சுக்குநூறாக உடைத்து விட்டார்.

இன்று வரை ஜக்கிய தேசியக் கட்சி தமிழர்களுக்கு இழைத்த அநீதிக்காக கடவுள் அவர்களுக்கு தண்டனை கொடுத்து விட்டார்.

ரணில்,மங்கள,ரவி, சஜித் இப்படி அந்த கட்சியின் சிரேஸ்ட்ட உறுப்பினர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் செய்துவிட்டார்.

13+ஜ ஏற்றுக் கொண்டவர்களுக்கே எனது வாக்கு.

தமிழர்கள் இன்னும் அழிந்து தமிழீழம் கண்டு யார் வாழப்போகின்றனர்?
நாட்டையாவது அபிவிருத்தி செய்யட்டும்.
இனியொரு யுத்தத்திற்கு இடமளிக்க முடியாது.

மன்னிக்கவும் இது எனது தனிப்பட்ட முடிவும் எனது ஐனநாயக வாக்குரிமையும்.
நன்றி
பேஸ்புக்

திணேஸ் திணேஸ்

Image may contain: text


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *