யாழில் அடிக்கடி உடலுறவுக்கு ஆசைப்பட்ட கணவனை விவாகரத்து செய்த மனைவி!! மீண்டும் பரபரப்பு!!

இன்னொரு சுவாரஸ்ய விவாகரத்து சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

குளிக்காத கணவனிடமிருந்து விவாகரத்து கோரி சுவாரஸ்ய சம்பவம் நேற்று
இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் நெட்டிசன்களினால் தற்போது வரை நகைச்சுவையாக
விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இன்னொரு சுவாரஸ்ய விவாகரத்து சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

தனது கணவன் அடிக்கடி உடலுறவிற்கு கோருகிறார் என தெரிவித்து பெண்ணொருவர் விவகாரத்து
கோரிய வழக்கு, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதில் இரு தரப்பு
இணக்கத்துடன், விவாகரத்து வழங்கப்பட்டது.

தனது கணவன் அடிக்கடி உடலுறவு கொள்ள வற்புறுத்துகிறார், ஒரு நாளிலேயே சிலமுறை
வற்புறுத்துகிறார் என குறிப்பிட்டு பெண்ணொருவர் விவாகரத்து கோரி, மல்லாகம் நீதிவான்
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஒக்ரோபர் 24ம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் அலெக்ஸ்ராஜா முன்னிலையில்
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷ் முன்னிலையாகினார். கணவன் சார்பில்
சட்டத்தரணி செல்வி இராயப்புவின் அனுசரணையில், ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதியாக
கடமையாற்றிய சட்டத்தரணி எஸ்.தியாகேந்திரன் முன்னிலையாகினார்.

இரு தரப்பு விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, பகிரங்க மன்றத்தில் அந்தரங்க விவகாரங்கள்
பேசப்படுவதால், விசாரணையை இடைநிறுத்தி, சமாதான அறையில் வழக்கை விசாரித்தார் நீதிவான்.

பெண் சார்பில் பிரிமனை பங்கு ஆரம்பத்தில் கோரப்பட்டபோதும், பின்னர் சமாதானமான விவகாரத்தை
மட்டும் கோரினார். இரு தரப்பு வாதத்தின் பின்னர், விவாகரத்து வழங்கப்பட்டது.

நான் எப்படி கோடீஸ்வரன் ஆனேன்? உண்மையை கூறும் சிறிதரன் எம். பி

நான் எப்படி கோடீஸ்வரன் ஆனேன்?உண்மையை கூறும் சிறிதரன் எம். பி

Posted by NewJaffna on Khamis, 7 November 2019


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *