யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் பெயரை மாற்றுங்கள்..!

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தின் பெயரை ஆறுமுக நாவலர் விமான நிலையம் என மாற்றப்பட வேண்டுமென சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

குறித்தவிடயம் தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார்.

அதில் அலையென வந்த அந்நியப் பண்பாட்டு படையெடுப்பைத் தனியொருவனாய் ஈழத்தில் தடுத்தவர் ஆறுமுக நாவலர் .

அத்துடன் அவர் ஓடங்களில், வள்ளங்களில், படகுகளில், தோணிக்களில் வடகடலை கடந்து தமிழகம் சென்று மீண்டவர். மாட்டு வண்டிகளில், குதிரை வண்டிகளில் ஈழத்திலும் தமிழகத்திலும் தெருத்தெருவாக அலைந்தவர் ஆறுமுக நாவலர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வந்து விட்டதே என தமிழர்கள் மகிழ்கிறார்கள். எனினும் ஆறுமுக நாவலர் சர்வதேச விமான நிலையம் என , சைவத்தமிழ் மக்கள் ஒரே குரலில் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டுமெனவும் சச்சிதனத்தன் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இந்த மண் பெற்றெடுத்த பயணப் பெருமகன், நடைபுகழ் ஆறுமுக நாவலரின் பெயரே, விமான நிலையத்திற்கு பொருத்தமானது எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *