சம்­பந்தன் மீது நாமல் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்

மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நாட்­டி­லுள்ள அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் தீர்த்து வைப்போம். எங்­களைப் பொறுத்­த­வரை வடக்கு, தெற்கு என்ற பிரி­வினை கிடை­யாது.

நாங்கள் எல்­லோரும் இலங்­கையைச் சார்ந்த மக்கள்.அர­சி­ய­லுக்­காக இனங்­களைப் பிரிக்­க­மு­டி­யாது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்­சியின் ஏற்­பாட்டில் பொது­ஜ­ன ­பெ­ர­மு­னவின் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் யாழ்ப்­பாணம் இலங்கை வேந்தன் கல்­லூரி மண்­ட­பத்தில் நேற்­று­மாலை இடம்­பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்…

மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நாட்­டி­லுள்ள அனைத்துப் பிரச்­சி­னை­களையும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் தீர்த்து வைப்போம்.

குறிப்­பாக இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு, அபி­வி­ருத்தி வேலைகள், வேலை­வாய்ப்­புக்கள், அர­சியல் கைதிகள் விடு­விப்பு, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான பிரச்­சினை, காணி விடு­விப்பு போன்­ற­வற்றை நாங்கள் தீர்த்து வைப்போம்.

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்த நாங்கள் வடக்­கையும் தெற்­கையும் இணைக்கும் வகையில் பிர­தான வீதி­களை செப்­ப­னிட்டு வடக்­கையும் தெற்­கையும் இணைத்து உற­வுப்­பா­லத்தை அமைத்தோம்.

வடக்கின் வசந்தம் வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்து பல்­வேறு வகை­யான அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்­டி­ருந்தோம். பாட­சா­லைகள், வைத்­தி­ய­சா­லைகள்,பொது­நோக்கு மண்­ட­பங்கள் போன்­ற­வற்றை கட்­டினோம்.

சமுர்த்தித் திட்­டத்தில் பலரை உள்­வாங்­கினோம். இது மட்­டு­மன்றி இலங்கை பொலிஸ் சேவைக்கு தமிழ் இளைஞர், யுவ­தி­களை உள்­வாங்கி அவர்­க­ளுக்கு பல்­வேறு பத­வி­க­ளிலும் அமர்த்­தினோம். இன்று எந்தப் பொலிஸ் நிலையம் சென்­றாலும் தமிழ் பொலிஸார் இருப்­பதை காணலாம்.

இவ்­வா­றாக பல வேலைத்­திட்­டங்­களை செய்­தி­ருந்­த­போதும் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தித்­தேர்­தலில் எங்­களை விட இன்­றுள்ள அர­சாங்கம் இன்னும் வேலைத்­திட்­டங்­களைச் செய்­வார்கள் என்று நம்பி இந்த அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­தார்கள். எனினும் இங்கு எந்த வேலைத்­திட்­டங்­களோ அபி­வி­ருத்­தி­களோ இடம்­பெ­ற­வில்லை.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனை பட்­ட­தாரி ஒருவர் சந்­தித்தார். அவர் எனக்கு ஒரு வேலை­வாய்ப்பு வேண்டும் என்று கூறி­யி­ருந்தார்.

அதற்கு சம்­பந்தன் எங்­க­ளுக்கு இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வுதான் தேவை. அது கிடைக்கும் வரையில் வேலைகள் எதையும் பெற்­றுக்­கொள்ள முடி­யாது எனக்­கூ­றி­யுள்ளார்.

இது தான் அவர்­களின் நிலை­மை­யா­க­வுள்­ளது. இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்­த­போதும் அர­சாங்­கத்­துடன் இருந்தே செயற்­பட்­டார்கள். ஆனால் வடக்கு மக்­க­ளுக்கு எத்­த­கைய செயற்­றிட்­டங்­க­ளையும் செய்து கொடுக்­க­வில்லை.

மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் அமைச்சர் டக்­ளஸ் ­தே­வா­னந்தா இருந்­த­போது வடக்கு மக்­க­ளுக்கு பல்­வேறு அபி­வி­ருத்­தித்­திட்­டங்­க­ளையும் வேலை­வாய்ப்புத் திட்­டங்­க­ளையும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்­து­ரை­யாடி செய்து கொடுத்தார்.

இந்த அர­சாங்கம் எத்­த­கைய வேலைத்­திட்­டத்­தையும் மேற்­கொள்­ள­வில்லை. நாடு­பூ­ராவும் பொரு­ளா­தார ரீதியில் எத்­த­கைய வளர்ச்­சியும் அடை­ய­வில்லை வடக்கை பொறுத்­த­வரை வடக்­கி­லுள்ள அனைத்து மக்­களும் கட­னா­ளி­க­ளா­கவே ஆகி­யுள்­ளார்கள்.

இதனால் பொரு­ளா­தார ரீதி­யான முன்­னேற்­றங்கள் எதுவும் இன்றி பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். குடும்­பங்­க­ளுக்குள் பிள்­ளை­க­ளுக்குள் பிரச்­சி­னை­களே அதி­க­ரித்­துள்­ளன. பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்கள் செல்­லாத நிலை ஏற்­ப­டு­கின்­றது. குடிநீர் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வா­றாக பல பிரச்­சி­னைகள் இன்று ஏற்­பட்­டுள்­ளது.

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் நீங்கள் ஒரு­மித்து செயற்­ப­டு­வதன் மூலம் தான் வடக்கை தெற்கை பிரிக்­காது ஒரு­மித்த அபி­வி­ருத்­தியை நோக்கி பயணிக்கமுடியும் . எங்களுக்கு இனங்களை பிரிக்கவேண்டிய அவசியம் இல்லை.

அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றாகவே பயணிக்க விரும்புகின்றோம் எங்களால் முடியும் என்பதை முடியும் என்றே கூறுவோம் முடியாது என்றால் முடியாது என்றே கூறுவோம்.

எனவே சுயலாப அரசியலுக்கு எடுபடாது ஒன்றிணைந்து செயற்படவேண்டும் வடக்கை முழுமையாக அபிவிருத்தி செய்வோம் யாழ்.நகரை அபிவிருத்தி நோக்கிய நகரமாக மாற்றுவோம் என்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *