முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்த பிக்கு – நீதவானின் உத்தரவு

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதிக்கும் விதமாக செயற்பட்ட பௌத்த பிக்குவை நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குரகந்த ரஜமகா விகாராதிபதியின் உடலை , ஆலய வளாகத்தில் தகனம் செய்ய பௌத்த பிக்குகள் முயன்றபோது , அது தொடர்பில் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை நீதிம்னறில் நடந்து கொண்டிருந்தபோது, உடலை தகனம் செய்ய பௌத்த பிக்குகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும் உடலை ஆலயத்திற்கு அப்பால், கடற்கரையோரமாக தகனம் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை பொருபடுத்தாத பிக்குகள் நீதிமன்றின் தீர்ப்பினை அவமானப்படுத்தும் விதமாக ஆலய வளாகத்தில் பிக்குகள் தகனம் செய்தனர்.

நீதிமன்ற உத்தரவை அவமதித்து நடந்த இந்த சம்பவம் தொடர்பில், பொலிசார் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

எனினும், அந்த அறிக்கையில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கபடுகின்றது.

இதன்போது, தகனம் தொடர்பான நீதிமன்ற கட்டளையை பெற்ற பௌத்த பிக்குவை நீதிமன்றத்தில் முற்படுத்த நீதிவான் உத்தரவிட்ட நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்ரோபர் 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *