“மூதூரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை”

மூதூரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பேருந்து சேவை ஒன்றை ஆரம்பிக்குமாறு மூதூர் பிரதேச மக்கள், மூதூர் இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூதூரில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான சேவை மூதூரிலிருந்து ஆரம்பிக்கப்படாமையினால், மூதூர் பிரதேச மக்கள் திருகோணமலை பேருந்து தரிப்பிடத்திற்கு 36 மைல் தூரம் பயணம் செய்து யாழ்ப்பாணத்திற்கான பேருந்து பயணத்தை மிகுந்த பணச் செலவுடனும் பல்வேறு சிரமங்களுடனும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் மற்றும் வர்த்தக ரீதியாக செல்லும் மக்களும் தினமும் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனவே இம்மக்களின் நலன் கருதி யாழ்ப்பாணத்திற்கான பேருந்து போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்குமாறு மக்களால் வேண்டப்பட்டுள்ளது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *